கவிதை

என் தலைவா நீ வருவாய்….

எட்டாவது அதிசயமே  என் தலைவா !!
எவர் கைகளுக்கும் நீ எட்டாத  அதிசய
-த்தை அறிவதற்கு-சில வல்லசருகள்
வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப்
-படையும்  மெஞ்ஞானம் கொண்ட
உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள்
அலைகிறது,,,,,,,,,

வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி
கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!!
உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு
சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு
வெற்றுடலை காண்பித்து அது உன் வித்
-துடல் என்றார்கள்

அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும்
முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி
-தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று
கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும்
சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை
-ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,,

வான் சிவக்க ஒளிபரப்பி நீ வருவாய்
உன் வெப்பம் கண்டு கரையும் பனி -எதிரி
-யின் தேசத்தை சென்று மூழ்கடிக்கும்
என் தலைவா நீ வருவாய்  கிழக்கை நோக்கி
காத்திருக்கிறோம் என் தலைவா

கூன்விழுந்த தமிழ் முதுகு செங்கோல் பிடி
-க்க நீ வருவாய் ,,என் தலைவா நீ
வருவாய்  வல்லை மைந்தா நீ வருவாய்

ஒரு புலி வீரனின் கவித் தீ..





பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்
பார்வதியானாளா..?
ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை
அழித்தெழுதிய ஆற்றல் வீரன்
பிரபாகரனைப் பெற்றதால்
பார்போற்ற நின்றாளா..?
வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா
தியாகத்தை எழுதிய புலிகள்
பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்
புகழ்பெற நின்றாளா… ?
அன்று..
தாயிறந்த செய்தி கேட்டு
துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே
துடிதுடித்து ஓடிவந்தார்
தாய் படுத்த சுடலைக்கு..
நீ பெற்ற பிள்ளை..
மானமுள்ள தமிழனுக்கெல்லாம்
நீயே தாயென்று போற்றி..
இன்று
உன் பிள்ளைகள் உலக முழுதும்
உன் சவக்கட்டில் ஏந்தி
ஊர்வலமாய் போகக் கண்டான்
போய் வா தாயே..
தன்மானம் குலையா தலைமகன்
வேலுப்பிள்ளையுடன்
ஈழத் தமிழினத்துக்காய்
சிறை கிடந்த சீமாட்டி நீ..
நேற்று…
நீ உயிருடன் இருந்தாய்
உன் மகனைத்தேடி
உன் வீடு தட்டியது சிங்கள இராணுவம் !
இன்று…
உயிரிழந்து கிடக்கின்றாய்
உன் மகன் வருவானென்று
ஊர் முழுதும் தேடுகிறது சிங்கள இராணுவம்..!
நீ வாழ்ந்த வீட்டின்
மண்ணெடுத்து வணங்குவான்
இதயமுள்ள தென்னிலங்கை சிங்களன்..!
மகிந்தவுக்கு கம்பளம் விரிக்கும்
மன்மோகனின் இந்தியாவோ
நீ வந்தால் விமான நிலையத்தையே மூடும்.. !
தமிழ் வீரன் எங்கள் கருணாநிதி
நானில்லை ஜெயலலிதா என்று
கோடியாலுக்குள் ஓடி – உன்
விமானம் திரும்பிப் பறந்துவிட்டதாவென
ஓரக்கண்ணால் பார்ப்பார்…!
தள்ளாத வயதென்றாலும்
தன் நினைவிழந்து போனாலும்
உனக்கஞ்சும்
இந்திய மேலாண்மை..
நீ வாழ்ந்த வீடு கிடந்தால்
அங்கும் புலியொன்று பிறக்குமென்று
இடித்துத் தகர்த்தார் இழிஞர்..
தாயே..
ஏனென்று கேட்கிறாயா… ?
நிலத்தின் அடியில் கிடந்தாலும்..
மன்னர் முடியில் கிடந்தாலும்..
வைரம் வைரம்தான்..
நீ எங்கு கிடந்தாலும்
நீ… நீதான்…!
உனக்கிணையுண்டோ உலகில்..!
அம்மா உன் பயணம் ஆரம்பித்துவிட்டது..
அழிந்துபோன சங்கத்தமிழை
ஆக்கித்தந்த அரும்பெரும் பெருமாட்டி
போய் வா..!
ஊறணிச் சுடலையில் உன் தலையில்
சுள்ளென ஒரு நெருப்புச் சுடும்…
நீ மட்டும்
மறந்துவிடாதே…
நீ மட்டும்…
ஒரேயொரு நொடி திரும்பிப்பார்…
உன் மகன்
தன் கடன் முடித்திருப்பான்..
உனக்காக ஒரு சிலை ஊரில் எழும்..!
ஒரு முறை
அதை வந்து பார்…!
முந்தித்தவமிருந்து
முந்நூறு நாள் சுமந்து
அந்தி பகலாய் ஆதரித்த
எங்கள் அம்மா..
போய்வா…!
முன்னையிட்ட தீ முப்புரத்திலே..
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே..
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே..
நானுமிட்ட தீ
மூழ்க மூழ்கவே..
எங்கள் அம்மா – இது
அஞ்சலிப்பா அல்ல
ஒரு
புலி வீரனின்
கவித் தீ.. !
உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்.


  பகைவென்று நாடமைப்போம்

வாழும் பூமி, வைகறை கவ்வும்

சாகும் போதினில் தன்னிலை எண்ணும்

வாசம் செய்ததும், வனத்தில் சாகசம் புரிந்ததும் ஏன் இன்னம் அடக்கம்?

காசு இல்லையே! கைகளில் காசு இல்லையே!! காத்திட வாடா தமிழா!!!

மறத்தமிழன் நீயோ மரத்தமிழனாகின்றாய்

குறைத்தமிழ் ஏனோ கதைத்து தமிழ்க் குடும்பத்தை அழிக்கின்றாய்



வெட்டுவேனாம், பின்பு காட்டுவேனாம்

அதிலும் ஆயிரம் முறைகள் நொட்டுவேனாம்

கத்துவேனாம், கூடவிருந்துவிட்டு குத்துவேனாம் என்று

சொன்னவனெல்லாம் கூடு கூட இன்றி குறுகிக் காய்கின்றனர்.



வாழவிடம் இன்றி வசைபட்டு சாகின்றனர்.

ஆயிரம் பாயிரம் எழுதினாலும் ஆசைகள் குறைவதில்லை

ஆசைகள் எட்டித்தான் வானத்திற் பறந்தாலும் மழைகளும் பொழிவதில்லை

காலத்தின் நல்ல நேரத்தின் வடுசுமையா தமிழனவன்

சுய இலாபத்தில் அமிழ்ந்துபோகுமா தமிழரின் போராட்டம் இல்லை



துளிர்விட்டு, தூத்துமம் தூபி கடல்தொட்டு வாழுமா?

சரித்திரப்புதல்வர், சாதி வெறியர் பெயரழித்து

தனித் தமிழீழ நாடமைத்து, தலைவர் வழி செல்லும் விசித்திரப்புதல்வர்கள் புகழ் எழுதப்படட்டுமே!



நடக்கும், வெல்லும் ஈழம் அடியிட்டுப் பணியாது கொல்லும் கொழும்போ திசைகெட்டு தெரியாது ஓடும்

காலம் நீண்டாலும் கடிகாரம் நிற்பதில்லை, இடங்கள் போனாலும் உறுதிகள் குறைவதில்லை.

பொங்கட்டும் தமிழினம் ஓரலையாய்

கண்கொண்ட சுனாமி கண்டவனை விரட்டட்டும்

வந்தபகை வென்றே தமீழம் மலரட்டும்
      - யாழ்நிலவன் -



என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….! 




அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!
என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!
உன் மார்பகங்களை விலத்தி…
பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி
சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ
பிணமாய்க்கிடந்தாய்…
என் தங்கையே
பிணத்தைப் புணரும்
சிங்களப் பேய்களை
இரத்தம் வழியும் கண்களால்
பார்த்துக் கொண்டிருக்கிறான்..
உன் அண்ணன்..
தாயே
இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?
இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு
தீர்ப்பெழுதப் போகிறான்..?
அம்மா அன்று
தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்
ஐம்பெரும் காவியங்களை அவள்
ஆபரணமாய் மாட்டினோம்.
அது தெரியாது..
நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்
எங்கே என்பார் மூடர்கள்..
தாயே..
அது நீதான் என்பதை
இன்றுவரை அறியான் நம்
தமிழ் மூடன்..!
தாயே இன்று
நீ கிடக்கும் கோலமே
என்னைப் பெற்றாளே அந்தத்
தமிழ்த்தாய்
அவள் கிடக்கும் கோலம் அம்மா..
குழந்தை பெற்ற வலி மாறாத
உன் புண்ணான உடலை
குதறிய நாய்களை
மறக்கச் சொல்கிறான்..
அவனுடன் உறவு கொள்வதே
அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்
என் இனத்தில் பிறந்த
தேர்தல் நாய்..
என் உடன்பிறப்பே..
உதிரத்தின் உதிரமே உன்
உடலம் கிடக்கும் காட்சியைப்
பார்த்த அண்ணன்
உன்னை அழித்தவன் தரும்
பாயில் படுத்துறங்குவானா ?
எண்ணிப்பார்…?
தமிழ் தமிழென முழங்கும்
தமிழகத்து தறுதலைகளை
அண்ணாவென நம்பி
அலறினாயே
உன் குரல் கேட்டு
கடவுளே ஓடிப் போனான்
ஈழத்தை விட்டு..
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து
தினமொரு கதை பேசுவோனால்
வேறென்ன முடியும் தாயே..
தூ..
வேண்டாம் விடு
இதைவிட வேசி வீடு போய்
விடுதலை கேட்கலாம் தாயே..
கரையற்ற கடலைப் பார்த்து
நம்பிக்கை குலைந்து கலகம் செய்த
கொலம்பஸ் கப்பலில் பயணித்த
கோழை மாலுமிகள் போல் இன்று
நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்
அதுதான்
உன் மரணம் பார்த்தபின்னும் தன்
கடமை உணராது..
ஆளையாள் அடிபடுகிறான்
அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்
தாழ்க்க முயல்கிறான்..
இதைப்பார்த்த மற்றவன்
இப்படியும் ஓர் இனமென்கிறான்..
இனியென்ன என்ற
இழவு விழுந்த கேள்வியையே
இருபத்து நாலு மணிநேரமும்
ஓய்வின்றிக் கேட்கிறான்..
உன் முகத்தைப் பார்த்த அண்ணன்
உள்ளத்தில் என்ன பதில் வரும்..
தாயே உன் பிணத்தை விற்று
தமிழனுக்கு ஒரு விடிவென்றால்
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
அந்த விடிவு
வேண்டாம் தாயே..!
உன்னை விற்று விடிவு பேசும்
நாயின் படலைக்கு உன்
அண்ணன் போனால்
ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று
அவன் பிணத்தை
வீதியில் போட்டு கொழுத்து தாயே !
மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்
இசைப்பிரியா தங்கை..!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்
இசைப்பிரியா தாய்..!
மானமுள்ள தமிழினத்தின்
ஒரேயொரு தேசியக் கொள்கை
இசைப்பிரியா.. !
எங்கள் தேசியக் கொடியின் தேவதை
இசைப்பிரியா..
தங்கையே..!
அநாதையாய் கிடக்கும்
உன் பூவுடலைத் தூக்கி
ஐயோ என் தங்கையே..! என்று
அழுதபடி
கொள்ளி வைக்கிறேன்..
தாயே என்னை நம்பு
தாயே !
என் தங்கையே.. !
உன் பூவுடல் நோகக்கூடாதென்று
வாழைத்தண்டில் வழத்தி
ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..
என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….!
- அண்ணன் -
அண்ணைக்கு அன்னை!
அழுவதற்கும் முடியாமல்
அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே
ஒன்று மட்டும் உறுதியம்மா…
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்
- அறிவுமதி -