புதன், 11 ஆகஸ்ட், 2010

சிங்கள குடியேற்றங்களையும், விகாரைகளையும் உள்ளடக்கி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான புதியவரைபடம் - தயாரிக்கும் முயற்சியில் பேரினவாத அரசு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் புதிய வரைபடமொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

   ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற அளவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்த வரைபடம் கீறப்படவுள்ளது.

   புதிய வரைபடத்தை உருவாக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை அளவை திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.எம்.டபிள்யூ. பெரேரா தெரிவித்துள்ளார்.

   தனியார்கள் காணிகள், அரசாங்கக் காணிகள், சுற்றுலா வலயங்கள் மற்றும் பயிர்ச் செய்கை நிலங்கள் போன்றவை இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

   எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு இந்த வரைபடங்களின் மூலம் பயனடைய முடியும் என அரச தரப்பு குறிப்பிடப்படுகிறது.

   இருப்பினும் இவ்வாறு புதிதாக வரையப்படும் வரை படத்தில் அவசர அவசரமாக வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்களையும், பெளத்த விகாரைகளையும் தெளிவாக வரைந்து அவற்றை நிரந்தரமாக வடக்கு கிழக்கில் இருந்தது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கவே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை கவனிக்கக்கூடியதாக உள்ளது.

   அத்துடன் வடக்கு கிழக்கு மாகானங்களின் நிலப்பரப்பை குறைக்கும் நோக்கம் கொண்டதாகவும் இந்த புதிய வரைபடத் திட்டம் இருக்கலாம் என்பதால் இதில் தமிழ் அரசியல் வாதிகள் கூடிய கவனம் எடுக்கவேண்டியிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக