| குறிப்பாக கிளிநொச்சிமாவட்டத்தில் சாந்தபுரம் பொன்னகர் ஊற்றுப்புலம் கோணாவில் அக்கராயன் போன்ற பகுதிகளும், பிரமந்தனாறு போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. |
| சாந்தபுரம் பகுதியில் மக்களின் கூடாரங்களுக்குள் மழைவெள்ளம் புகுந்தநிலையில் அங்குள்ள மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். இப்பகுதியில் 4 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 4 தாய்மார் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தத் வெள்ளத்திற்குள்ளேயே வாழ்கின்றனர். மழையினால் மலசல கூடங்கள் நிரம்பி அதனுள்ளிருந்து புழுக்கள் மக்களின் குடிசைகளுக்குள் செல்கின்றன. இதுகுறித்து எந்த அரச அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளாத நிலையில் மக்கள் பட்டினியுடன் வேறு வழியற்றவர்களாக அங்கேயே உள்ளனர். இவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் செய்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரைக் கேட்டுக் கொண்டார். மேலும் சிறுவர்களுக்கான காலை உணவையும் பெற்றுக் கொடுத்தார். |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக