கேள்வி : இலங்கை செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இடம் பெறுவார்களா?
கருணாநிதி பதில் : இல்லை.
தமிழக உறவின் குரல் : என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…இன்னும் எவ்வளவு நாட்கள் தமிழர்களை ஏமாற்ற போகிறார்கள்… முழு பலத்தையும் இழந்து அனாதரவாய் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய ஏன் தமிழ் நாட்டை ஆளும் கட்சிகளுக்கு சிறிது எண்ணம் கூட வரவில்லை…
பங்களாதேசை பிரிக்கும் பொழுது வங்காள மொழி பேசுபவர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் செய்த உதவிகள் சொல்லி மாளாது… தமிழ்…தமிழ் என்று பிழைப்பு நடத்தும் இந்த அரசுகள் வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை…இவர்கள் உதவுவதாக நடத்தும் நாடகங்கள் தான் நம்மில் கோபத்தை வர செய்கிறது.
அன்று புலிகளை சொல்லி அவர்களை ஒதுக்கினர்கள் இன்று அதே புலிகளை சொல்லி சிறுமை படுத்துகின்றனர்… என் தந்தையோ…தாயோ… எனக்கு இன உணர்வை ஊட்டவில்லை…நான் கற்ற தமிழ் எனக்கு இன உணர்வை ஊட்டியது… தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறோம்…ஆனால் ஒரு சிறு நாடு நம்மை சிறுமை படுத்துகிறது… நமது வீரத்தை பற்றி கேள்வி இல்லை… நமது விவேகம்…ஆழ்ந்து சிந்தித்தால்…நாம் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறோம்…நமக்கு நாம் அரசனை போல் தான் வாழுகிறோம்…ஆனால் ஒரு இனமாக இன்று நாம் தாழ்ந்து இருக்கிறோம்… இது பலருக்கு புரிவதில்லை…ஒரு இனத்திற்கு உள்ளேயே மாநிலத்தை பிரிப்பதில் ஆந்திர மாநிலமே பற்றி எரிந்தது…வேறொருவன் நம்மனவனை நமக்கு தெரிந்தே நசுக்கினான்…நமது விவேகம் என்ன ஆனது… நம்மிடம் இந்தியாவை சார்ந்த எந்த இனத்தவரும் இறையாண்மையை பற்றி பேச தகுதியே கிடையாது…இனத்தை பலிகொடுத்து உலகிலயே முதல் இனமாக நாம் அல்லவா இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்…
தமிழர்களே! இது தான் இன உணர்வோ…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக