உலக சமாதான தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கரித்தாஸ் எகெட் அமைப்பினால் நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
இன்று காலை 9.30மணியளவில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் கரித்தாஸ் எகெட் இயக்குனர் அருட்தந்தை பேராசிரியர் ரி.எஸ்.சில்வெஸ்டர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மும்மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு –திருமலை மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை,காத்தான்குடி ஜமஇத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர்,சுவாமி ஆஜராத்மானந்த மகராஜ் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் பாடசாலை மணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சமாதானத்தை வலியுறுத்தி மதத்தலைரவர்களினால் உரைகள் நிகழ்தப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
எங்களை நாட்டைப்போன்று ஏனை நாடுகளிலும் இனமோதல்கள் இருக்கின்றன, ஆயுதமோதல்கள் இருக்கின்றன இப்படியான வேளையில் இங்கு நாம் சமாதானத்தை பற்றிபேசுவதும் சிந்திப்பதும் எங்களுடைய இளம் உள்ளங்களுக்கு மிகவும் முக்கியமாகின்றது.
இப்படியான சமாதானம் ஏன் மோசமாக குலைக்கப்படுகின்றது.சமாதானம் அழிக்கப்படுகின்றது,சமாதானம் மலர்ந்ததல் ஒற்றுமையாக இருக்கமுடியாது,ஒற்றுமை குலைந்தால் மனித இனமே அழிந்துவிடும் என்ற பயமும் உள்ளத்தில் ஒரு ஆதங்கமும் வளர்ந்துவருகின்றது.
இப்படியான ஒரு சூழ் நிலையில் சூறாவளி ஒன்றுவந்து எமது நாட்டையும் மக்களையும் தாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் எம்மத்தியில் இருக்கின்றது.
சொல்லப்போனால் எங்கள் மத்தியில் ஆயுதங்கள் ஓய்ந்திருக்கின்றது,யுத்தம் நிறுத்தப்பட்டிருக்கின்றது,ஆனால் சமாதானம் தலைக்கும் என்ற நிலைப்பாடு,உத்தரவாதம் அங்கு இல்லை.இன்னும் நீறுபூத்த நெருப்புப்போன்றுதான் இன்றைய நிலை இருக்கின்றது.
இதேநேரம் இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஸன் தலைவர் சுவாமி ஆஜராத்மானந்த மகராஜ்,ஒவ்வொருவருடைய மனங்களிலும் பூக்கும் அன்பு மலர்கள் சமாதானத்தைக்கொண்டுவரும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக