திங்கள், 6 செப்டம்பர், 2010

சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக் கின்றார்கள்.

இலங்கை அரசுக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தர் பணியில் 1997 முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே ஈடுபட்டது.

ஆனால் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டது என்று ஐரோப்பிய கவுன்சிலின் செயலாளர் நாயகமும்- நோர்வேயின் முன்னாள் பிரதமரும்- நோர்வே தொழில் கட்சிப் பிரமுகருமான Torbjørn Jagland  பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

அவரைப் போலவே சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் இவ்வாறான விமர்சனங்களை அடிக்கடி முன்வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.  இந்நிலையில் உண்மையில் நோர்வே தவறிழைத்து விட்டது தானா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு அரசு விரும்புகின்றது.

இந்நிலையில் நோர்வேயின் Chr Michelsen Institute (CMI), English School of Oriental and African Studies (SOAS) ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக