இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்.
இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இலங்கை கடற்படையினரும் கண்டுகொள்ளாததால், இலங்கை கடல் பகுதி சென்று மீன்பிடித்து திரும்பினர்.
இந்நிலையில் தமிழக எம்.பி.இக்கள் பலர் லோக்சபாவில்," இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவும்,' மத்திய அரசை வலியுறுத்திப்பேசினர்.
இதன் அடுத்த நாள் இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர் முனியாண்டி என்பவரின் படகில் இருந்த வலை,போட்பலகை, நங்கூரம் மற்றும் மொபைல் போன் போன்றவற்றை பறித்த இலங்கை கடற்படையினர்," இனிமேல் இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது,' என, எச்சரித்து உள்ளனர்.
இதனிடையே,நேற்று கச்சத்தீவு கடல் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கப்பல்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், "ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளை நடுவழியில் தடுத்து, இலங்கை கடல் பகுதிக்குள் செல்லக்கூடாது' என,எச்சரித்து விரட்டியடித்துள்ளனர். இதனால் , மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் இன்று கரை திரும்பினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக