யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டுக்குளி படை முகாமில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அவரது கைத்தொலைபேசி வெடித்ததால் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கைத்தொலைபேசியை மின்னேற்றம் செய்தவாறு, அதில் வந்த அழைப்பை எடுக்க முற்பட்ட சிறீலங்கா இராணுவச் சிப்பாய் தொலைபேசி வெடித்துச் சிதறியதால் பார்வையிழந்துள்ளார்.
படுகாயமடைந்த சிப்பாய் உடனடியாக யாழ் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவது இரண்டு கண்களில் இருந்தும் கைத்தொலைபேசி பற்றரியின் சிதறல்கள் அகற்றப்பட்டுள்ளன. எனினும் அவர் பார்வையை இழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மின்னேற்றப்படும் கைத்தொலைபேசியை அந்த நிலையில் வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புத்துறை பொறியியல் பீட விரிவுரையாளர் கலாநிதி ஈ சி குலசேகரா தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக