இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சியிருப்போரும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லல்படும் நிலை இன்றும் தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் உதவியுடன் பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
"திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பேரணியும் நடைபெறும்.
இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சியிருப்போரும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லல்படும் நிலை இன்றும் தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் உதவியுடன் பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசு நேரடியாக தலையிட்டு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும்.
பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தனி அமைப்பு உள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே மேற்படி வீரமணி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக