கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி நேற்று கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கடந்த வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான ஊதியம் பெறாத நிலையிலும் குறைந்தளவு ஊதியம் பெற்றும் தொண்டர் ஆசிரியர் கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கற்பித்தல் நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் வேறுமாவட்டங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் தமக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் போது கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜாவிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இவ் விடயம் குறித்து மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் இதன்போது ஆசிரியர்களுக்குத் தெரிவித்ததுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக