மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவ பேச்சாளரான மார்சல் அல்லது இளந்திரையன் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமாரும் சாட்சியமளித்தனர்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிவின் முன்னாள் தளபதியான கிருஸ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவியான பொபித்தா பிரபாகரனும் சாட்சியமளித்தார்.
மூன்று பிள்ளைகளின் தாயான வனிதா சிவரூபன், தனது இளைய மகனுடன் சாட்சியமளிக்க வருகை தந்திருந்தார்.
இவர்கள் இருவரும் தமது சாட்சியங்களில், தமது கணவன் மற்றும் பிள்ளைகள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது இராணுவத்தினரால் விசாரனைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு 3 மாதங்கள் கழிந்த போதிலும் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற தகவலை தங்களால் அறிய முடியாதிருக்கின்றது.
தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அவர்களை கண்டு பிடித்துத் தருமாறு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
(விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவ பேச்சாளரான மார்சல் அல்லது இளந்திரையன் எனப்படும் இராசையா சிவரூபன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிவின் முன்னாள் தளபதியான கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் ஆகியோரின் மனைவியர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதை படங்களில் காணலாம்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக