திங்கள், 18 அக்டோபர், 2010

விடுதலைப்புலிகள் இயக்கம் விற்பனைக்கு – மொத்தமாக வாங்கினால் ஒட்டுக்குழு ஒன்று இலவசம்.

விடுதலைப்புலிகள் வீழ்ந்து விட்டார்கள் என சிறீலங்கா அரசு கடந்த வருடம் அறிவித்த பின்னர் அனைத்துலகிலும், தாயகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன, நிகழ்ந்து வருகின்றன.

அதில் முதன்மையானது, புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் சிறீலங்கா – இந்திய அரசுகளின் கூட்டு முயற்சியாகும்.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதான ஆயுமாக தமிழ் ஊடகங்கள் மாற்றம் பெற்றுள்ளன. கடந்த வருடத்தின் பின்னர் பல தமிழ் ஊடகங்கள் முடப்பட்டுவிட்டன, பல இணையத்தளங்கள் அதன் போக்குகளை மாற்றி விட்டன, மேலும் பல புதிய இணையத்தளங்கள் உருவாகியுள்ளன.

இவர்களில் யார் எம்மை காக்க போகின்றனர்? யார் எம்மை அழிக்கப்போகின்றனர் என்பது புரியாது தமிழ் இனம் விழி பிதுங்கி நிற்கின்றது. புதிதாக தோற்றம் பெற்றுள்ள இணையத்தளம் ஒன்று பாலியல் செய்திகளுக்கும், படுக்கையறை தகவல்களுக்குமே முன்னுரிமை கொடுத்து வருகின்றது.

தமிழ் மக்கள் பாலியல் ரீதியாக பலவீனமானவர்கள் என இந்த இணையத்திற்கு யார் சொன்னது?

வேறு சில இணையத்தளங்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளை வெளியிடுவதில்லை, தாயகத்து அவலங்களை மட்டுமே வெளியிட்டு தம்மை தேசியத்தின்பால் ஈடுபாடு கொண்டவர்களாக காட்ட முற்படுகின்றன.

தாயகத்து அரசியல் என்பது சிறீலங்கா அரசின் சிறைக்கைதி என்பது வெளிப்படையானது, அங்கு மகிந்தாவின் விரல் அசையாது, ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது. ஆனால் அதனை முதன்மைப்படுத்தி பலமாக செயற்படும் நிலையில் உள்ள புலம்பெயர் அரசியலை பின்தள்ளும் இந்த இணையங்களின் நோக்கம் தான் என்ன?

எனது நண்பர் கூறியது போல “தற்போது எமது எதிரி என்பவன் எம்மைப் போலவே இருக்கிறான், எமது உணவையே உண்கிறான், எம்முடனும் உண்கிறான், எம்முடன் உறங்குகிறான், எம்மைப்போலவே தேசியம் பேசுகிறான்”

ஆனால் இது எதுவரை

நாம் கண்அயரும் போது பாறாங்கல்லை தலையில் போடும் வரை தான்………………………

அண்மையில் ஒரு செய்தி ஒன்றை இணையங்கள் மிகவும் தந்திரமாக வெளியிட்டுள்ள.

அதாவது மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று உள்ளதாம், முதலைகள் இருப்பதால் அதிரடிப்படை அங்கு செல்ல முடியவில்லையாம்.

அடப்பாவிகளா!!!

வன்னியில் நடைபெற்ற போரில், மிக்-27, கிபீர், பல்குழல் உந்துகணை செலுத்தி, ரீ-55 ரக டாங்கி என கனரக ஆயுதங்களை பயன்படுத்தி காடு மேடெல்லாம் சுடுகாடாக்கி அனைத்துலகத்தின் போரியல் விதிகளை எல்லாம் மீறி போரை முடித்த சிறீலங்கா படையினருக்கு முதலைக்கு பயமாம்!!!!!!!

ஒருவேளை முதலையை சுட்டால், மனித உரிமை மீறலாகி, அது போர்க்குற்றமாகி விடும் என்ற அச்சமோ…..

“கேக்கிறவன் கேணையன் என்றால், எருமை மாடு ஏயர்பஸ் – ஏ-380 ஓடுமாம்”

சரி இவ்வாறு ஆரம்பித்துள்ள செய்தியில் நடுவில் என்ன சொல்கிறார்கள், அந்த முகாமில் உள்ள விடுதலைப்புலிகள் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவருடன் இணைந்து விட்டார்களாம்,

அப்படி என்டால் ஒட்டுக்குழு ஆகி விட்டார்கள் அப்படித்தானே???

சரி பின்னுக்கு என்ன சொல்கிறார்கள்

பாகிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கு அவர்கள் தற்போது அந்த முகாமில் வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்?????

ஊஷ்ஷ்ஷ்ஷ்………………………. அப்பா……………. இப்பவே கண்ணைக்கட்டுதே…………….

விடுதலைப்புலிகளின் சின்னத்தை படமாக போட்டுவிட்டு, அந்த புனிதமான இயக்கத்தின் மீது என்ன களங்கத்தை ஏற்படுத்த அவன்கள் திட்டமிட்டான்களோ, அதனை கன கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறான்கள்.

இன்னொரு குசும்பு என்னவென்றால் – இந்த செய்தியின் உபயகாரர் – சிறீலங்கா சிறப்பு அதிராடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவாம்??????

இப்ப விளங்குதோ இந்த செய்தின் உள்நோக்கம் என்னவெண்டு,

சிறீலங்காவில் பாகிஸ்த்தான் தீவிரவாதிகள் 200 பேர் ஊடுருவி உள்ளதாக அமெரிக்காவும், அவர்களுக்கு சிறீலங்கா அரசு அடைக்கலம் கொடுத்துள்ளதாக அனைத்துலக புலனாய்வு அமைப்புக்களும் தெரிவித்துவரும் நிலையில், தற்போது விடுதலைப்புலிகளே அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பாதுகாத்து வருவதாக சொல்ல வருகின்றன இந்த இணையங்கள்.

பரபரப்பான செய்திகள், பாலியல் செய்திகள் என இந்த ஊடகங்கள் ஏன் தடுமாறி தவள்கின்றன?

ஒரு வரியில் விடை உண்டு.

தமது தளத்தை அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்று தான்…..

இதனை நான் சொன்போது, எனது நண்பர் ஒருவர் சொன்னார், “தங்களை அதிகம் பேர் பார்க்கவேண்டும் என்பதற்காக அம்மணமாக கூட நிற்பதற்கு தயங்காதுகள் இந்த ஜென்மங்கள்” என்று.

அதுவும் உண்மை தான்.

இருந்தாலும் இதனை எல்லாம் பார்க்கும் போது எனது மனதில் தோன்றுவது ஒன்று தான். அதாவது, தமிழீழ தேசித்தலைவர் கூறியது போல

“நான் இறந்த பின்னர் இயக்கத்தை நீங்கள் மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்யலாம்” என்பது போல.

தற்போது அவர் இறந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்த பின்னர், தமிழ் தேசியத்தை மொத்தமாக விற்பனை செய்வதற்கு பல தமிழ் அரசியல்வாதிகள் தயாராகி விட்டார்கள், அதனை சில்லறையாக விற்பனை செய்வதற்கு பல இணையத்தளங்கள் தயாராகிவிட்டன.

இனி நாம் என்ன செய்ய முடியும்?

ஆனால் என்னால் ஒன்றை மட்டும் இங்கு கூற முடியும்.

“Be careful”

நான் என்னை சொன்னேன். தமிழ் மக்களை சொன்னேன், சில்லறை வியாபாரிகளே உங்களை அல்ல.

நன்றி: ஈழம் ஈ நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக