பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக் கொலைசெய்த விதவைத்தாயார் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். வன்னிப்பகுதியிலிருந்து இப்பெண் இடம்பெயர்ந்து முகாமில் தங்கிய பின்னர் சண்டிலிப்பாயில் உள்ள சகோதரியின் வீட்டில் வசிக்கும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயிற்றுவலி காரணமாக இப்பெண்ணை சங்கானை ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது அவர் குழந்தையை பிரசவித்ததுள்ளார். அப்போதுதான் இவர் குழந்தையை பிரசவித்த விடயமும் சகோதரிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அப்பெண்ணிடம் விசாரணை செய்தபோது குழந்தை பிறந்து அதனைப் புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதா என்பது குறித்து தேடுதல் மேற்கொண்டனர்.
அப்போது குழந்தையின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்துக்கு இதனை அறிவித்ததையடுத்து நீதிவான் பி.கஜநிதிபாலன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட நிலையில் இப்பெண் யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இப்பெண்ணின் கணவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக