வடக்கு-கிழக்கு பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற விடயத்தை நாள்தோறும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பலர் சிங்களவர்களுக்கம் காணிகளை விற்பனை செய்துமுள்ளனர்.
மேலும், ஏற்கனவே வடகிழக்கு பகுதிகளில் வசித்த சிங்களவர்களின் வரலாறுகள் உண்மைக்கு புறம்பாக சோடிக்கப்பட்டு வடகிழக்கு பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதற்கான மூளைச்சலவையும் தீவிரமாக இடம் பெற்றுவருகின்றது.
இதற்கிடையே தமிழர்களின் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுமிருக்கின்றன. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வரலாற்றை முற்று முழுதாக மாற்றும் பாரிய நடவடிக்கையில் பேரினவாதம் ஈடுபட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசு ஏற்கனவே தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதுடன் பௌத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கு ஊக்கம் அளித்தும் வருகின்றது. தலதா மாளிகையில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலை அடுத்து ஏற்பட்ட இடிபாடுகளில் தென்பட்ட பண்டைய சுவரில் தமிழர்களின் அடையாளங்கள் தென்பட விடயத்தை ஸ்ரீலங்கா மூடிமறைத்து விட்டுள்ளது. (வடக்கு கிழக்கு பகுதிகளில் இவ்வாறு சிங்களத்திற்கான ஆதாரம் கிடைத்திருந்தால் ஸ்ரீலங்கா அரசும் சிங்கள ஊடகங்களும் மூடி மறைப்பார்களா?)
யாழ்ப்பாணவரலாறு என்னும் ஆங்கில இணையத்தளம் தமிழர்களின் தாயகம் இந்தியா என்றும், சிலோன் சிங்களவர்களின் தாய் நாடு என்றும், தமிழர்கள் சுமாராக 2000 ஆண்டுகளுக்கு முன்னனே இலங்கையில் அகதிகளாக குடியேறினர் என்று போலி ஆவணங்களை ஆதாரம் காட்டி தகவல்களை பரப்பி வருகின்றது.
தமிழர்களை வரலாற்று ரீதியாகவும் ஒழித்துத் தீர்வதற்கு பேரினவாதம் தீட்டியுள்ள திட்டங்களை தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் எதிர்க்க வேண்டும்.
தமிழர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது போன்று ஒரு தோல்வியை ஸ்ரீலங்கா சந்தித்து இருந்தால் சிங்களவர்கள் தமக்குள் தாமே மோதி ஒருவரையொருவர் துரோகி என்பார்களா?
இல்லை முழு சிங்களவர்களும் ஒன்றுபட்டு போராடுவார்கள். தமிழர்களுக்கு எங்கே போய்விட்டது இன ஒற்றமை?
- வின்சன் ஜெயன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக