இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இம்மாதத்தின் இறுதி நாட்களில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இந்தியாவின் துணைத் தூதரகங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இவ்விஜயம் எதிர்வரும் 25-28 ஆம் திகதி வரை என்று நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு தூதரகங்களுக்கும் தனித்தனி உதவித் தூதுவர்கள் இம் மாதம் நடுப்பகுதியில் கொழும்பு வருகின்றனர்.
யாழ்ப்பாண துணைத் தூதுவராக வி.மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தோனேசியா, குரோசியா ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதரகங்களில் முன்பு கடமையாற்றியவர்.
தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் கொன் சியூலர் பிரிவில் பணிப்பாளராக கடமையற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக