நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு முகாம்களை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால் நாடு இராணுவ மயமாகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இன்று எதிர்க்கட்சிகள் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை உள்ளது. பாதுகாப்புக்காக ஏன் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக்கூட கேட்க முடியாது. முன்னாள் இராணுவத் தளபதியை சிறைக்குள் அடைத்துப் பழிவாங்கும் அரசாங்கம் அவருக்கு சார்பாக சுவரொட்டிகளை ஒட்டினால் கூட எதிரியாகத்தான் பார்க்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக