ஞாயிறு, 26 டிசம்பர், 2010

5000 போராளிகளே தடுப்பு முகாமில் உள்ளதாக அரசு தெரிவிப்பு: மிகுதிப்பேர் எங்கே?

இன்னமும் 5000 போராளிகளே தமது தடுப்பு முகாமில் உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. மிகுதிப்பேரை தாம் விடுவித்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் 15,000 போராளிகள் சரணடைந்ததாக 2009 மே யூன் மாதம் அறிவித்திருந்தது. இந்த எண்ணிக்கை படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்களை உள்ளடக்காத தொகையாகும்.


ஆனால் இந்த வருடம் தம்மிடம் 12,000 போராளிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியது.அவர்களை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும் கூறியது. சில நூறு போராளிகளை விடுவித்தும் இருந்தது. ஆனால் இப்போ 5000 போராளிகளே இருப்பதாக கூறுகின்றது.

இதன்படி 2009 கணக்கின்படி 10,000 பேர் விடுவிக்கபப்ட்டு இருக்க வேண்டும். 2010  கூறிய கணக்கின்படி 7000 பேரை விடுவித்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு தொகை விடுவிக்கப்பட்டுள்ளார்களா என்றால் இல்லை. அவ்வாறாயின் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டுள்ளார்களா? அல்லது இரகசிய முகாம்களில் உள்ளனரா?

அரசாங்கம் கூறுவது உண்மை எனில் கைது செய்யப்பட்ட, சரண்டைந்த போராளிகளின் விபரங்களை ஏன் வெளியிடவில்லை.? அது போன்று இதுவரை விடுவிக்கப்பட்ட போராளிகளின் விபரங்களை ஏன் வெளியிடவில்லை?
இந்த விபரங்களை வெளியிட்டால் உண்மையாக கணக்கு தெரிந்துவிடும் அல்லவா அல்லது இரகசியமாக கொல்லப்பட்டவர்களின் விபரம் தெரிந்துவிடும் அல்லவா? ஆகவே இவற்றை தவிர்க்குமுகமாகவே அரசாங்கம் தனிப்பட்ட  விபரங்களை இற்றைவரை வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக