புதன், 1 டிசம்பர், 2010

வாகரைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்

வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட அங்கு கடமையிலிருந்த பொலிஸார் மீது இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இச் சம்பவம் கடந்த 25ஆம் தேதி காலையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவதினத்தன்று காலையில் மட்டக்களப்பு, வாகரைப் பொலிஸ் நிலையத்துக்குள் திடீரெனப் புகுந்த அந்தப் பிரதேச இராணுவ அதிகாரியும் இராணுவ வீரர்களும் திடீரெனத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காணப்பட்ட கதிரைகளைக் கொண்டே அவர்கள் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத நிலையில் செயற்பட்டு வந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பில் எழுந்த கருத்து முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக