தமிழனென்ன தரணியிலே மகிந்தா -பலர்
தாகத்துக்கு இளனி வெட்டும் தலைவா
விழவிழ நீ வெட்டியது தமிழாம் -நாம்
வீழ்ந்துவிட்டோம் என்றுனக்கு திமிரா...
குடிப்பதற்கு தமிழ்குருதி எடுத்தே -நாம்
கொட்ட இரத்தம் குளித்தவனே விடவா
அடியில்லாத மாடெதுவும் படியா இந்த
அடியுனது வாழ்வில் விழும்படியாம்
மளமளன்று விழ இதுவே முதலாம் இனி
மற்றதெல்லாம வரும்சரிந்து விழவாம்
எழ உனக்குஇனி எதுவும் இலையாம் இனி
இருப்பதெல்லாம் சறுக்குமிது சரியாம்
களமிழந்தால் உனக்கு செருக்கா -பொய்
கதைபடித்து உலகை ஏய்த்த திமிரா
அழுதஎங்கள் சாபமெல்லாம் வருமாம் உனை
அழித்துவிட இதுதொடக்க வரமாம்
உயிரிழந்து மனமழிந்து பெண்மை அது
உற்றதொரு கற்பழித்து உடையை
உருவியவர் உடல்கிழித்த கொடுமை இனி
உனைவிடுமோ சத்தியமா யில்லை
செருப்பெடுத்து அடித்ததென்ற இழிமை -இது
செய்ததொரு தொடக்கம் இனி அனலாய்
நெருப்பெடுத்து உனை கொழுத்தும் பெண்கள்
நெஞ்ச மிட்ட சாப தீயில் எரிவாய்...
வரிகள் -:கிரிகாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக