வெள்ளி, 17 டிசம்பர், 2010

வடபகுதியில் வாழ்வாதார நிலமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை – உலக உணவு திட்டம்

போர் முடிந்தும் வடபகுதியில் வாழ்வாதார நிலமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளினொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது தெரியவந்துள்ளதாக உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது. இந்த மாவட்டங்களில் பெுரம்பாலானவர்கள் தமது வருமானத்தின் 65 விழுக்காட்டினை உணவிற்கு மட்டுமே இன்னமும் செலவிடுகினார்கள் எனவும் கூடவே இந்த உணவிற்கான போராட்டத்தில் போசாக்குணவு மிகவும் கீழ மட்டத்தில் உள்ளதாகவும் உலக உணவு திட்டம் கூறியுள்ளது.

மறுவளமாக இலங்கை அரசானது தமது தேசிய வருமானம் 8 விழுக்காடாக வளர்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த பொருளாதார வளர்ச்சியானது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தென்பகுதி கிராமங்களுக்கும் சுவறவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக