திங்கள், 6 டிசம்பர், 2010

ஆயிரமாயிரம் தமிழர்களைக் கொன்றொழித்த இழிமகனுக்குத் தன் வாழ்நாளிலேயே கிடைத்த மாபெரும் இழிவு - அருண், கிள்ளான்

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” “விதையன்று போட சுரயன்று முளக்குமா?” “ஆடா செய்பவன் படாபடுவான்”, என்பனவெல்லாம் இயல்பான சொற்றொடர்களாகும். அன்றாட வாழ்வில் நம் முன்னோர் உரைக்கும் இவ்வகைத் தொடர்கள் பொருள் பொதிந்தனவாகும்.

நாம் விதைத்தவையே நம்மிடம் திரும்பி வருகின்றன. இதனையே, “ஊழ்வினை உருத்வந் ஊட்டும்…” என்கின்ற சிலப்பதிகாரம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றும் நம்முடைய வினையால் விளைபவையே என்னும் கூற்றின இச்சொற்றொடர் உணர்த்துகின்றது.

ஊழியின் வலிமையப் பற்றி மிக நுட்பமாக விளக்குகின்றது சிலப்பதிகாரம். ஊழினை அரசியல் தளத்தோடு ஒப்பிட்டு நோக்குகின்றார் திருவள்ளுவர். சான்றோரின் வாய்மொழிக்கேற்ப இந்நாளில் ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது.

“தீவிரவாதத்தை ஒழித்தல்” என்னும் போர்வைக்குள் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே. தம் உரிமைகளைத் தட்டிக் கேட்டமைக்காகத் தமிழினத்தயே வேரறுக்கும் செயலில் இறங்கிவிட்டார் இலங்கை அதிபர். அப்பாவிப் பொதுமக்களை முள்வேலி முகாமிற்குள் அடைத்து மனிதவதை செய்து கொண்டிருக்கின்றார். உலகத் தமிழர்களின் வயிற்றெரிச்சலையும் வசைமொழியையும் ஒட்டுமொத்தமாக வாங்கிக் கொண்டு உலா வருகின்றார்.

தமிழினப் படுகொலையை முன்னிட்டுப் “போர்க் குற்றவாளி” (War criminal) என முத்திரை குத்தப்பட்டுள்ளார். மகிந்தா செய்த ஊழ்வினை இன்று அவரை ஓட ஓட விரட்டுகின்றது. ஊழ்வினை சூழ்ந்த இழிமகனைப் புறமுகிட்டு ஓடச் செய்துள்ளனர் இலண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள்.

பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட்டு பல்கலக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்து கொள்ள இலண்டன் சென்றுள்ளார் ராஜபக்சே. இதற்குப் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எல்லாவற்றையும் மீறி, கடந்த 30.11.2010-இல் இலண்டனுக்குப் புறப்பட்டார்.

இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கி ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் செல்வதற்குத் திட்டமிடப்படிருந்தது. மகிந்தாவின் வருகையை எதிர்த்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஹீத்ரு விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.

கண்டன அறிக்கைகள், பதாதைகள், கையேடுகள் முதலியவற்றினை ஏந்திக்கொண்டு எதிர்ப்புக் குரல் ஒலிக்கப்பட்டது. பல்வகை சொற்றொடர்களின் ஊடாகத் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர். தமிழர்களின் எதிர்ப்பினைக் கட்டுப்படுத்வதற்குக் காவல்துறையினரும் விமான நிலைய பாதுகாவலர்களும் பெரும்பாடுபட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்மானமிக்கத் தமிழர்களின் குரலே ஓங்கியிருந்தது.

இலங்கை அதிபர் மகிந்தாவிற்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கும்பொருட்டு, அவரைப் புறவாயில் வழியாக கூட்டிச் சென்றனர் காவல்துறையினர்.

கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்ட திருடனைப்போல விழி பிதுங்க தப்பிக்க முயன்றார் மகிந்தா. ஹீத்ரு விமான நிலைய வரலாற்றில் ஒரு நாட்டுத் தலைவரைப் புறவாயில் வழியாகக் கூட்டிச் செல்வது இதுதான் முதல் முறையாகும். இஃ இழிவின் உச்சமில்லயா!

இந்தியா, சீனா போன்ற வல்லரசு நாடுகளின் ஆதரவு நிறைவாகப் பெற்ற ஒரு நாட்டுத் தலைவனுக்குப் புறவாயிலே தப்பிக்கும் வழியாகக் கிடத்துள்ளது.

இதை விட இழிவு வேறொன்றுமில்லை. தன் நாட்டு மண்ணை மகிழ்ச்சிப் பெருவுள்ளத்தோடு மண்டியிட்டுத் தழுவிய அதே அதிபர்தான் அந்நிய மண்ணில் புறமுகிட்டு ஓடியுள்ளார். ஆயிரமாயிரம் தமிழர்களைக் கொன்றொழித்த இழிமகனுக்குத் தன் வாழ்நாளிலேயே கிடைத்த மாபெரும் இழிவு இஃதாகும். இனி, மகிந்தா உயிரோடு இருப்பும் இறப்பும் ஒன்றுதான்! எட்டி பழுத்தென்ன பயன் ஈயாதார் வாழ்ந்தென்ன பயன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக