ஈழத்தமிழினம் தனது பிறப்புரிமையான சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக ஆயுதம் ஏந்திப் போராடியதை ஏற்றுக் கொள்ளாத மேற்குலக நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். தமது ஏகாதிபத்தியக் கொள்கைகளை என்றுமே அமுல்படுத்த விரும்பும் பிரித்தானியா தனது நலன்களுக்காக தமிழ் இராச்சியங்களை சிங்கள இராச்சியங்களுடன் ஓன்றாக இணைத்து ஆட்சி செய்தனர்.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் போது 29 வது சரத்தினை சாட்டுப் போக்காகக் காட்டி தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ளச் சட்டங்களை இணைத்தனர். பிரித்தானியர் இலங்கையைவிட்டு 60 வருடத்திற்கு முன்னர் விலகிய காலம் தொடக்கம் தமிழ் மக்கள் இன அழிப்புக்கும். வன்முறைகட்கும் ஆளான போது இலங்கையின் உள்விவகாரம் என்ற போர்வையில் சிங்கள அரசின் போருக்கு ஓத்துழைத்தனர்.
பிரித்தானியாவின் வர்த்தக நலன்கள் தமிழர்களின் இனப்படுகொலையிலும் பார்க்க முன்னுரிமை பெற்றதாக எப்பொழுதும் இருந்து வந்தது. தமிழர்களின் விடிவிற்காக, வந்துதித்த தலைவன் தமிழர்களை இனஅழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக, ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தபோது, தமிழ் மக்கள் தம் இனிய தலைவன் வழியைப் பின்பற்றிய போது,சிங்கள இனம் வெற்றி கொள்ள முடியாமல் திண்டாடிய போது,மேற்குலக நாடுகளும்,சீனா,இந்தியா போன்ற நாடுகளினது உதவியுடனும். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் பாரிய பின்னடை சந்தித்தது. தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது.
ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை இந்தியாவின் அங்கீகாரத்துடன் நடந்தேறியது.
சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா.சபை யினால் கொண்டுவரப்பட்ட, இனப்படுகொலைக்கான போர்க் குற்றவிசாரணை வீட்டோ அதிகாரத்தினுடாக முறியடிக்கப்பட்டு இலங்கை அரசு காப்பாற்றப்பட்டது.
தமிழின அழிப்பு நடைபெற்ற கையோடு சீனாவும் சிங்களத் தலைவர்களும் கைகோர்த்தபடி, இந்தியாவையும்,மேற்குலக நாடுகளையும் ஓரங்கட்டத் தொடங்கிவிட்டனர்.
சீனாவின் “பூமாலை” வியூகத் திட்டத்திற்குள் இலங்கையும் சீனாவுடன் சேர்ந்து கொண்டது.
இந்தியாவைச் சுற்றிலும் சீனாவை ஆதரிக்கும் நாடுகளை உருவாக்குதையே சீனாவின் “பூமாலைத்திட்டம்” என்று அரசியல் அறிஞர்கள் அழைக்கின்றனர்.
இன்று சிறிலங்கா அதிபர் இராசபக்சே தன்னை ஒரு ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனாக நினைத்துக் கொண்டு சீனாவின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு “அரசியல் சண்டித்தனங்கள்” செய்து கொண்டு இறுமாப்புடன் உலகை வலம் வந்து கொண்டிருந்த வேளையில், லணடன் வாழ் தமிழரின் ஒற்றுமை மூலம் அவரின் முகத்தில் கரி பூசப்பட்டது.
அதிபர் இராசபக்சேயின் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக உரை போர்க்குற்றவாளி என்ற காரணத்திற்காக திடீரென நீக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய அறிஞர்களை உருவாக்கும் ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகமானது தனது பல்கலைக்கழகத்தில் “போர்க்குற்றவாளி’ ஒருவரை அழைத்து சொற்பொழிவாற்ற இடமளித்தது என்ற அவப்பெயரை சுமக்க விரும்பாமையே இதன் முக்கிய காரணமாகும்.
குறிப்பாக லண்டன் வாழ் தமிழ் மக்களினதும் ,ஐரோப்பா வாழ் தமிழ் மக்களினதும் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என இதனை அறுதியிட்டுச் சொல்லமுடியும்.
முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட கதவுகள் பிலப்படெல்பியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாக மலர்ந்த போது,சிங்கள் அரசு அச்சம் கொண்டு அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு,நாடு கடந்த அரசினைத் தடை செய்யுமாறு கேட்டபோது அமெரிக்க நாடு மறுத்தமையையும்,தமிழர்களின் ஒற்றுமையின் வெற்றியாகக் கொள்ள முடியும். சிங்கள இனவெறி அரசிற்கு எதிராக வலுவான சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் செயற்படத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் தொடக்க நிகழ்வாக நாடு கடந்த தமிழீழ அரசு மலர்ந்ததையும். இரண்டாவதாக இலண்டனில் இராசபக்சேயின் முகத்தில் கரிபூசியமையும்,
இனிவரும் காலத்தில் அவர் நின்மதியான தூக்கத்தை என்றுமே கொள்ள முடியாதென்பதையும்,ஒற்றுமையான லண்டன் தமிழர்களின் செயற்பாடு ஆணவப் பேய்;களுக்கு அறுதியாக அடித்துச் சொல்லிவிட்டது.
லண்டன் தமிழர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்களும் தங்கள் செயற்பாடுகளை இன்றே தொடங்க வேண்டும். போர்க்குற்றம் புரிந்த அனைத்து இராணுவத்தளபதிகள் மீதும் இராசபக்சே மீதும் போர்க்குற்ற வழக்குகளை தாக்கல் செய்வதில் அதிசிரத்தை காட்ட வேண்டும் என முள்ளிவாய்க்காலில் எமக்காக மரணத்தை அணைத்தவர்கள் சார்பாக வேண்டுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக