சனி, 25 டிசம்பர், 2010

நிபுணர் குழு ஏனைய அமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தும்!

இலங்கை அமைத்துள்ள குழுவை விட ஜ.நா.நிபுணர் குழு விரிவானது. எனவே ஜ.நா.வின் நிபுணர் குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தவிர வேறு அமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தவுள்ளதாக ஜ.நா. தெரிவித்ததுள்ளது.

இந்த நிபுணர் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரம் தொடர்புகளை ஏற்படுத்தாது.பரந்தளவில் தொழிற்படுமென ஜ.நா.வின் பதில் கடமையாற்றும் பிரதி பேச்சாளர் பார்கான் காக் ஊடகவியலார்களுடனான சந்திப்பில் தெரிவித்ததார். ஜ.நா.வின் நிபுணர் குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மட்டும் தான் பேசுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக