ஞாயிறு, 19 டிசம்பர், 2010

வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டம்

வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித் துள்ளனர்.
வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடிய மர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம். ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத் தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நான்கு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்த அரசு திட்டந்தீட்டியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மையில் இவர்கள் வெளியிட்ட தகவலுக்காக அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இத்தகைய தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இதுபற்றி இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்டிய போதெல் லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வலம்புரி எழுதுகின்றதெனப் பிரசாரம் செய்யப்பட்டது.
என்ன செய்வது? எங்கும் போக்கிரித்தனங்கள் தலை விரித்தாடத் தொடங்கினால் தேவையற்ற-ஆரோக்கிய மற்ற மற்றவர்களின் மனங்களை நோகடிக்கக் கூடிய வெறுவிலித்தன விமர்சனங்களே தாண்டவம் ஆடும்.இப்போதும் நாம் கூறுகின்றோம். அன்புக்குரிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே! தமிழ் மக்களின் நலன் கருதி ஒன்றுசேருங்கள். ஓரணியில் திரளுங்கள். அப்போது தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வெளிச்சத்துக்கு வந்து சேரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகிய மூவரும் வன்னிக்குச் சென்றனர்.

மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். கள நிலைமைகளைக் கண்டனர். உண்மை வெளிப்பட்டது. நான்கு இலட்சம் சிங்கள மக்களைக் கொண்ட மாபெரும் குடியேற்றத் திட்டத்தை நிறைவேற்ற அரசு தீட்டியுள்ள திட்டத்தை வெளிப்படுத்தினர். அந்தத் தகவல் லண்டன் பி.பி.சியிலும் ஒலிபரப்பப்பட்டது. இப்போது உலகம் உண்மையை அறிந்து கொண்டுள்ளது. இதைத்தான் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற அனைவரிடமும் கேட்கின்றோம்.

உங்களுக்காக-பதவிக்காக துன்பப்பட்ட தமிழ் மக்களுக்குக் கெடுதி இழைக்காதீர்கள். அது மிகப் பெரும் பாவச் செயல். அன்புக்கினிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே!உங்களிடம் தாழ்மையாகக் கேட்பது, கல்லுகள், முள்ளுகள், காடுமேடுகள் எங்கும் நடந்து சென்று தமிழனமே உன் துயரைச் சொல். அவலத்தைச் சொல். உலகமே இதைப் பார். இந்த அவலத்தை பார். இதற்கு முடிபுகட்டு என்று கூப்பாடு போடுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக