வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடும் மழை பொழிந்து வருகின்றது. இதனால் இரு பொதுமக்கள் கடந்த 24 மணி நேரத்தினுள் உயிரிழந்துள்ளனர். தீவகம், மன்னார் தீவு, தென்மராட்சி கிழக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகள் பிரதான தரைப்பகுதியில் இருந்து மழை வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் இராமாவில் ஏதிலிகள் முகாம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வன்னி , யாழ்ப்பாணம் , மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 72 ஆயிரம் தமிழ் மக்கள் மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக