அடுத்தடுத்த அடிகளால் ஆடிப்போய் இருக்கிறார் போர்க்குற்றவாளி மகிந்த, தமிழீழ மக்களின் முற்றுகை, மனித உரிமை அமைப்புக்களின் நீதிவிசாரனைக்கான அழைப்பு,
மேலாக ஊடகங்களின் ஒளி-ஓலி ஆதாரங்கள் என மகிந்தவின் உடற்சமநிலையை அதிகமாகவே ஆட்டிக்கொண்டிருக்குமென்றால் மிகையில்லை. உலகில் இன்னுமொருநாட்டுக்கு ஒரு நாட்டு தலைவன், வந்து விமான நிலைய பின்வழியாக தப்பியோடிய பெருமை மகிந்தவையும், அத்தனை நிகழ்த்திய சாதனையையும் தமிழீழ தமிழர்களையும் சாரும்.
இனி மகிந்தருக்கு என்னென்ன சோதனைகள் வரப்போகின்றது என்று விரிவாகப்பார்க்கலாம், முக்கிய ஆதாரமான சனல்4 வெளியிட்ட ஒளித்தொகுப்பையும், தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒளி-ஒளி ஆதாரங்களையும் கொண்டு முடிந்தளவு மகிந்தவை இல்லாது போனால் படைத்துறை 59 வது கட்டளை அதிகாரி சகி கல்லகேயை (மகிந்த திட்டமிட்டே இவரை அழைத்து வந்திருப்பார்)குறைந்தது இவரையாவது கைது செய்துவிடும் ஓர்மத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் ஏனைய அமைப்புக்களும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்தக்கட்டுரை எழுதப்படும் வரை தளபதி ரமேஷ் அவர்களை குரூரர்கள் விசாரிப்பது தொடர்பான ஒளிப்படம் வெளியாகியிருந்தது. இவையெல்லாம் மகிந்தவை விசாரிக்கவேண்டுமென்பதில் மனித உரிமை ஆர்வளர்களும், முக்கியமாக பிரித்தானிய ஊடகங்களும் ஆர்வம் காட்டுவதையே வெளிப்படுத்துகின்றன.
ஒரு நாட்டில் இனஅழிப்பு நடந்திருப்பதை ஒத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கும் உலகத்தின் கண்களிலிருந்து இனி சிங்களம் தப்புவது இயலாத விடையமென்ற செய்தி,சொந்த இனத்தை வகைதொகையின்றி காவுகொடுத்து அழுது, வாடியிருந்த உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறது, இதற்கென பாடுபட்ட அனைத்து அமைப்புக்களையும்,ஊடகங்களையும் நாம் நன்றியுணர்வோடு வணங்கி நிற்கின்றோம்.
உலகத்திலுள்ள தமிழினமெல்லாம், 2009 ம் ஆண்டு எவ்வாறு போர்நிறுத்தம் வேண்டி, வீதிகளில் இறங்கினோமோ, அதே உணர்வுடன் வீதிகளில் இறங்கவேண்டும், சிங்களவன் உங்கள் நாட்டில் காலடி வைத்தால், முதலாவது அடியாய் அவனை எதிர்த்து நிற்க வேண்டும். இன்றைய பிரித்தானிய போராட்டத்துக்கு பிறகு மகிந்த தப்பினால், இனிமேல் எந்த நாடுகளுக்கும் வர யோசிக்க வேண்டும். அதோடு நின்று விடாது உலகம் எம்மைப்பார்க்கும் சமயத்தில் எல்லா முயற்சிகளுடனும் மகிந்த கும்பலை போர்க்குற்றத்தில் தண்டனை பெற்று தரவேண்டும், எல்லோரும் சொல்வதையே நானும் சொல்கிறேன், தலைவர் 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சொன்னது போல் "இப்போதைக்கு" புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எமது விடுதலையை முன்னெடுக்க முடியுமென்பதை அனைவரும் உணரத்தலைப்படவேண்டும், பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள், செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர், இனிவரும் காலங்களில் எல்லா இடங்களிலும் இவ்வகைப்போராட்டங்கள் பரவவேண்டும்.
விடுதலையில் வீழ்ந்து போன எங்கள் வீரர்கள் மீதும், அழிக்கப்பட்ட எங்கள் மக்கள் மீதும் ஆணையாக நாளை தமிழீழம் மலரும். கொடியவர்கள் தண்டிக்கப்படுவார்கள், தமிழீழக் கொடி ஐ.நாவை வீரத்துடன் அலங்கரிக்கும்.
உ.ராஜேஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக