வியாழன், 2 டிசம்பர், 2010

மஹிந்தவுக்கு அடங்கிய அதிர்வின் அம்பலம்


உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வெளிவிடும் இணையத் தளங்களை பொய் என சித்தரித்து பொய்களை கூறும் அதிர்வு இணையத்தளம் தற்போது இயங்காமைக்கு காரணம் என்ன என்பது அம்பலமாகியுள்ளது அதிர்ச்சியே.

அதிர்வு பற்றி அதிரடியாக தெரியவருவதாவது,

மகிந்த லண்டனில் நிற்கும் இந்நாட்களில், தமிழ் மக்கள் போராட்டங்களை ஒழுங்கு செய்துகொண்டிருக்கும் இத்தறுவாயில், தமிழரின் உண்மையான ஊடகம் என கூறிக்கொண்டு இயங்கிய 'அதிர்வு' போலிக்காரணங்களைச் சொல்லி இயங்காமலிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியதாலே இவ் அம்பலம் வெளியாகியது.

மஹிந்தவுக்கு அடங்கியதா அதிர்வு? என எல்லோருக்கும் சந்தேகத்தை இதுவரை காலமும் ஏற்படுத்தியதாலும் தற்போது அச்சந்தேகத்திற்கான பதில் "ஆம்" என்றே தெரியவந்துள்ளது.

இயங்காமல் இருப்பதற்கான காரணம் 'தரமுயர்த்தல் நடைபெற்று வருகிறது' இது போலியானது என அதிர்வின் நெருங்கிய நண்பர்கள் சிலர், தமக்கு தெரிந்த சிலருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய இவ் இணையத்தளத்தை இலங்கை அரசு தன்வசப்படுத்தி அம்பலங்களை வெளிவிடாதவாறு தன்கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததோடு இலங்கைச் செய்திகளை வெளியிட்டு, தன் அம்பலம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவ்வப்போது சில ஈழச்செய்திகளையும் இலங்கை அரசுடன் சேர்ந்து வெளியிட்டு இயங்கியதே இவ் அதிர்வு இணையத்தளம்.

அதுமட்டுமன்றி புலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் ஈழ உணர்வாளர்களை படமெடுத்து இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து அவர்களை சுட்டிக்காட்டி கைதுசெய்ய வைக்கும் நடவடிக்கையையும் இவ் இணையத்தளமே மேற்கொண்டு வந்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறாக அதிரடியாக இயங்கிக்கொண்டிருந்த இவ் இணையத்தளம், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு வந்திருக்கும் இந்நிலையில் அடங்கிப்போயுள்ளதோடு, ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு வருகின்றார் தளத்தை இயக்காமல் வைத்திருக்குமாறு என்ற வேண்டுகோளுக்கிணங்கவே தற்போது தளம் முடங்கிப்போயுள்ளது. நிர்வாகியால் நிற்பாட்டப்பட்டுள்ளது. ஆனால், தரமுயர்த்தல் காரணம் என்பது ஒரு கபடநாடகமே.

இணையத்தளம் தரமுயர்த்தல் என்ற போர்வையில் அடங்கிப் போயிருக்கும் இத்தளம், ஈழத்தமிழர்களால் முற்றுகையிடப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு பாதுகாப்பாக சென்றடையும்பட்சத்தில் பொலிவோடு இயங்கும் என்பது வெளிச்சம்.


இன்னும் 15 மணித்தியாலங்களில் அனைத்தும் நிறைவடைந்து அதிர்வு இணையம் மீண்டும் இயங்கும்! தடங்கலுக்கு வருந்துகிறோம்!

என அறிவித்திருப்பதில் இருந்து தெரியவருவதாவது என்னவெனில்,

ஈழத்தமிழர்களுக்கு பயந்து இலங்கைக் எம்பசியில் ஒளிந்து கொண்டிருக்கும் மகிந்த இன்னும் 15 மணித்தியாலத்தினுள் விமான நிலையம் சென்று இலங்கைக்கான விமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பார் என்பதையே பறைசாற்றுகின்றது.

(அனைத்தும் நிறைவடைந்து - ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்து, அதாவது மகிந்த இலங்கை சென்றபின் தமிழர்களின் ஆர்ப்பாட்டம் அடங்கிவிடும் அதன்பின் அதிர்வு உதயமாகும் என்பது அர்த்தம்)

இதுமட்டுமன்றி, தமிழ்தேசிய கூட்டமைப்பு இடம்பெயர் மக்களுக்கு உதவி செய்தாலோ, இல்லை அரசுடன் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக கதைச்சாலோ அதை நக்கலாக வெளிக்கொண்டுவந்து ஈழமக்களை குழப்பும் நடவடிக்கையையும் இத்தளம் பரப்புரை செய்வதும் குறிப்பிடத்தக்கது.

அரசின் காலடியில் உறங்கும் டக்ளஸ் இன் கைக்கூலியாகவும் அதிர்வு செயற்படுவதாக இவ் இணையத்தளத்தின் நண்பர் குழாம் அறிவித்திருக்கின்றது.

அத்தோடு பிரித்தானியாவில் கே.பி என்பவர் வசித்துவந்தபோது அதிர்வு இணையத்தளம் அவரின் கீழேயே இருந்ததும், தற்போது கே.பி. இலங்கை அரசாங்கத்திடம் விலைபோனபின் அதிர்வும் அரசுடன் ஒன்றிப்போயுள்ளது. அதன் பின்னர்தான் எளிதாக இயங்கிவந்த அதிர்வு, பற்பல அலங்காரங்களோடு தனது வெளித்தோற்றத்தினை அலங்கரித்ததும் வெளிவராத உண்மை.

சில அரசியல் பிரமுகர்களிடம் தொலைபேசியில் உரையாடி அவர்களிடம் உள்ளவற்றை கேட்டறிந்து, அதில் வடிகட்டி சில உரையாடல்களை அகற்றிவிட்டு வெளியிட்டு மக்களிடம் நற்பெயரை ஏற்படுத்தும் இத்தளம், முழு உரையாடலில் அரசுக்கான செய்திகளை வழங்குவதே இத்தளத்தின் இராஜதந்திர நடவடிக்கை. இருதலைக்கொள்ளி எறும்பாக செயற்பட்டு வரும் போலி தளங்களின் மாயத்தோற்றத்தைக் கண்டு மயங்காதீர்கள் மக்களே.

இதுபோல அமைதியாக அரசாங்கத்தோடும் அதிர்வோடும் சேர்ந்து சில இணையத்தளங்களும் இயங்குவதாக நண்பர்கள் மூலம் நம்பகரமான தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றது.

அவ்வப்போது ஈழத்தமிழர்களுக்கான செய்திகளையும் போட்டு தந்திரமாக செயற்படும் அதிர்வுபோன்ற இணையத்தளங்கள் தாமும் ஈழ உணர்வாளர்கள் தான் என வேசமிட்டுக் காட்டிக்கொண்டாலும், விஷ மாத்திரையில் இனிப்பு தடவிக்கொடுப்பது போன்ற தந்திரமான செயலையே செய்து மக்களிடம் தம்மை நண்பர்கள் என தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்களை குழப்பி ஏமாற்றும் இவர்களும் துரோகிகளே.

நன்றி - மனிதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக