ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு வன்னியில் கடந்த வருடம் இடம் பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அடுத்த மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மின்னஞ்சல் வழியாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இது தொடர்பாக கூறியுள்ளார்.
வன்னிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பலரது சாட்சியங்கள் கிடைத்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இச் சாட்சியங்கள் முழுவதும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என குறிப்பிட்ட அவர் சாட்சியமளித்தவர்களின் பெயர்களோ அல்லது குறிப்பிடத்தக்க அடையாளமோ நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் பதிவு செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் இந்த நிபுணர் குழு அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் எழுத்து மூலமான சாட்சியங்கள் மட்டுமே கோரப்பட்டுள்ளதாகவும் பான் கீ மூன் இச் செவ்வியில் கூறியுள்ளார்.
இவ் அறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுவருகிறது.
அத்துடன் மூவரடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு சாட்சியங்களை வழங்கியவர்களின் பெயர், விபரங்கள் இரகசியமாக பேணப்படும் என இச் செவ்வியில் பான் கீ மூன் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக