அண்மையில் அதிகம் பேசப்பட்ட விடயங்களில் ஒன்று யாழ் தொல்புரம் பொக்கணைப்பகுதியில் பத்துத்தலை நாகபாம்பு காணப்பட்டதாக வெளிவந்த செய்தியாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மெதுவாக கசியத்தொடங்கிய அச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாக இம் மாதம் வரையிலும் சூடு பிடித்திருந்தது தற்போது அச்செய்தியில் எவ்வித உண்மைகளுமில்லையென்பது எண்பிக்கப்பட்டிருக்கின்றது.
உறவுகளே, பத்துத்தலை நாகம் போலியாக சித்தரிக்கப்பட்டது என்பற்கு ஆதாரமாக ஒரு தலை நாகத்தின் படமும் மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத்தலை நாகத்துக்கு பத்துத்தலை பொருத்திய தொழில்நுட்பவியலாளரின் செய்கையை உணர்த்த இரு புகைப்படங்களையும் இங்கு வெளியிடுகின்றோம்.
நன்றாகப்பாருங்கள் ஒரு தலை நாகத்தின் பின்னால் அதன் நிழல் ஒற்றையாகத்தெரிகிறது அதே படத்தை பத்துத்தலைகளாக மாற்றிய போதும் ஒற்றைத்தலை நிழலாகவே தெரிகிறது. இப்போது உங்களுக்கு உண்மை புரிந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக