செவ்வாய், 14 டிசம்பர், 2010

புலிக்கொடி தொடர்பில் காவல்த்துறையினரே நடவடிக்கை எடுக்கமுடியும் அரசு எதுவும் செய்யமுடியாது: - பிரித்தானியா தூதரகம்

விடுதலைப்புலிகளின் தடை தொடர்பிலோ அல்லது புலிக்கொடி தொடர்பிலே நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது எனவும், அது தொடர்பில் காவல்த்துறையினரே நடவடிக்கை எடுக்கமுடியும் என கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகம் இன்று (14) தெரிவித்துள்ளது.



போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரிக்கும் நோக்கத்துடன் கொழும்பில் இருந்து வெளிவரும் அரசசார்பு ஊடகமான த டெய்லி மிரர் பத்திரிகை அனுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே பிரித்தானியா தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மகிந்தா ராஜபக்சாவுக்கு தேவையான பாதுகாப்புக்கள் பிரித்தானியாவில் வழங்கப்பட்டதாகவும், ஒக்ஸ்பேட் மாணவர் அமைப்பில் இடம்பெறவிருந்த உரை நிறுத்தப்பட்டது பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய விடயம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக