ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தின் போது அவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானது என்ற கேள்வி எழவில்லை. பிரித்தானியப் பொலிஸார் தகுந்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர் எனப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள் ளது.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பிரித்தானிய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதெனவும் உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. டெய்லி மிரர் ஊடகவியலாளர் ஒருவர் மின்னஞ்சல் ஊடாக எழுப்பிய கேள்விகளு க்குப் பதிலளிக்கும்போதே பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு,
பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமெனத் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பகிரங்க மாக ஆதரவு தெரிவிக்கும் சுமார் 400-500 தமிழர்களின் அழுத்தங்களுக்கு தேம்ஸ் வெல்லி பொலிஸார் பணிந்தது எப்படி?
பிரித்தானியப் பொலிஸார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொருத்தமான பாது காப்பு வழங்கியிருந்தனர்.அவரின் பாது காப்பு அச்சுறுத்தலுக்குள்ளானது என்ற கேள்வி ஒருபோதும் எழவில்லை.
மேற்படி தடை காகிதத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதா?
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் அங்கத்தவர்கள் இலங்கைக்கும் அதன் ஜனாதிபதிக்கும் எதிராக எல்.ரி.ரி.ஈயின் கொடிகளை ஏந்தியவாறு பகிரங்கமாகச் செயற்படுவது எப்படிச் சாத்தியமானது?
பிரிட்டனில் 2001 ஆம் ஆண்டு எல்.ரி. ரி.ஈ. அமைப்பு ஓர் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது இத்தடையின் மூலம் கிரிமினல் குற்றமாகிறது. தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் கூட்டமொன்றை தெரிந்து கொண்டே ஏற்பாடு செய்வது அல்லது அவ்வமைப்பின் ஆடைகளை அணிவது அவற்றின் பொருட்களைப் பகிரங்கமாகக் கொண்டு செல்வதும் கிரிமினல் குற்றமாகும்.
கிரிமினல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது பிரித்தானியப் பொலிஸாரின் பொறுப்பாகும்.பொலிஸாரின் செயற்பாட்டு விடயம் குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் கருத்துக் கூற இயலாது. ஜனாதிபதி ஒபாமா பிரிட்டனுக்கு விஜயம் செய்யும் போது அல்குவைதா அல்லது தலிபான்கள் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் பிரித்தானிய அரசாங்கமும் பிரித்தானியப் பொலிஸும் இதே போன்றே நடந்து கொள்ளுமா?
இல்லை
நட்புறவான பொதுநலவாய நாட்டின் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொள்ளும் போது அது தனிப்பட்ட விஜயமாக இருப்பினும் அவருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்குவது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பில்லையா?
ஒக்ஸ்போட் யூனியன் நிகழ்ச்சியை திட்டமிடுவதிலோ அதை இரத்துச் செய்யும் தீர்மானத்திலோ பிரித்தானிய அரசாங்கம் சம்பந்தப்படவில்லை.பொது மக்கள் ஒழுங்கும் பாதுகாப்பு விவகாரமும் ஒக்ஸ்போட் யூனியன் மற்றும் பொலிஸார் தொடர்பானவையாகும்.
தடைக்கு மத்தியிலும் எல்.ரி.ரி.ஈ யினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கமும் பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அமைப்புகளும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகின்றன?
கிரிமினல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது பிரித்தானிய பொலிஸாரின் பொறுப்பாகும்.பொலிஸாரின் செயற்பாட்டு விடயம் குறித்து பிரித்தானிய அரசாங்கம் கருத்துக் கூற இயலாது.
பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டங்களை மீறும் இத்தகைய சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் எதிர் பார்க்கிறது?
( பதில் இல்லை)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏன் விசா மறுக்கப்பட்டது?
தனிப்பட்ட விசா விண்ணப்பங்கள் குறித்து மூன்றாம் தரப்புக்கு பிரித்தானிய உயர்ஸ் தானிகராலயம் கருத்துக் கூற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக