ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரண உதவிகளின் பிரதி இணைப்பதிகாரியுமான கத்தரின் பிரகங் நேற்றுக் காலை இலங்கைக்கு விஜயம் செய்தார்.
இலங்கையிலுள்ள ஐ.நா அதிகாரிகள், பொது அமைப்புகளை கத்தரின் பிரகங் நேற்று சந்தித்து உரையாடினார்.
இன்று காலை வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு செல்லும் அவர், இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய செல்வார் அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்ல உள்ள அவர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்க உள்ளார்.
தனது விஜயத்தின்போது அவர் அரச அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்துவார். நாளை கொழும்பில் தங்கியிருக்கும் ஐ.நா. மனித நேய விவகார பிரதிச் செயலாளர் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கெத்தரின் பிறகங் தனது இலங்கை விஜயத்தின் போது சர்வதேச ஒத்துழைப்பு நாடுகளை கோரவுள்ளதாகவும் தெரியவருகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக