இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து ஐ.நா. சபையில் முறையிடுவோம். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவின் இலங்கைப் பயணம் வெறும் கண்துடைப்பு. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தின் பிரச்சினை மட்டுமல்ல, அது இந்தியாவின் தேசியப் பிரச்சினை. இவ்வாறு பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாமரை யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள இராணுவ மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தின் பிரச்சினை மட்டுமல்ல. அது இந்தியாவின் தேசியப் பிரச்சினை.பா.ஜ.கவுக்கு 165 எம்.பிக்கள் உள்ளனர். அவர்கள் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா. அமைப்பின் மனித உரிமை ஆணையத்துக்கு பா.ஜ.க. எடுத்துச் செல்லும்.மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வாய்ப்பு கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக