வியாழன், 20 ஜனவரி, 2011

தனி நாடாக மலரப்போகும் தென் சூடான்

தென் சூடான் தனி நாடாக வேண்டும் என்று 80 வீதமானவர்கள் வாக்ளித்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன என்று வாக்குக் கணிப்பு அலுவலர்கள் கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் சேதி வெளியிட்டிருக்கிறது. கடந்த வாரம் ஆரம்பித்த வாக்குக் கணிப்பில் சூடானின் 10 தென் மாகாணங்களில் 7 மாகாணங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 90௦ வீதமானவர்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாகளித்திருபதாகவும் வாக்குக் கணிப்பு முடியும் போது இந்த எண்ணிக்கை அதிகமாகலாம் என்று தேர்தல் உத்தியோகத்தர்கள் தெரிவித்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பகுதியில் உத்தியோகபூர்வமாக முடிவுகள் வெளியிடப்படும் வரை வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தென் சூடானியத் தலைவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனநாயக் வழியில் தமிழீழப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் நேச நாடாகவும் அதனை அங்கீகரிக்கும் இறையானமையுள்ள முதல் நாடாகவும் தென் சூடான் அமையுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்..

மலரவிருக்கும் தென் சூடானிய தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக