எல்லாமே முடிந்து விட்டது….!
எல்லாமே ஒரு கனவு போல இருக்கக் கூடாதா…?
பலம் இருந்தபோதே தீர்வை தராதவன் இப்போது என்னத்தை கிழிக்கப்போறான்…!
ஆயுதமும் ஆட்டிலறியும் ஆகாய விமானமும் இருக்கிறபோது சாதிக்க முடியவில்லையாம்
தேர்தலிலை வெண்டுதான் கிழிக்கப்போகினமாம்.
பேசாமல் எல்லாரும் அழிஞ்சு போகவேண்டியதுதான்.
பொடியள் அவசரப்பட்டு விட்டுட்டான்கள்
அதாலைதான் எல்லாம் முடிஞ்சு போச்சு…
என்னத்தை தேர்தலிலை நின்டு
என்னத்தை வெண்டு வந்து….
என்னத்தை கிழிக்கப் போறாங்களோ….!
என்ன ஏதோ சினிமா தாயகத்திலை எடுங்கிறாங்கள் எண்டு நினைக்காதையுங்க. கொஞ்சமேனும் தன்மான உணர்வு ஒட்டிக்கொண்டிருக்கிற மனிதர்கள் இப்படித்தான் எங்கடை தாயக வீதிகளிலை புறுபுறுத்துக் கொண்டு திரியினம்.
என்ன செய்;யலாம் என்ன செய்யலாம் எண்டு சிந்திச்சே இரண்டு வருடம்; முடியப் போகுது. இன்னும் ஒரு முடிவையும் காணவில்லை
ஒரு பகுதி என்னடாவெண்டால் தலைவர் வருவார் அவர் பார்த்துக் கொள்வார் என்று ஒதுங்கி நிண்டு பழைய புகழ் பாடிக் கொண்டு நிக்குது.
ஒரு பகுதி என்னடாவெண்டால் கிடைச்ச சமயத்தை பயன்படுத்தி டக்கரையோ, பசிலையோ, அங்கஜனையோ பிடிச்சு தங்களை டெவலப் பண்ணுறதும் தங்கடை இஷ்டத்துக்கு எல்லா பஞ்சமா பாதகங்களையும் செய்யிறதுமா நிக்குது.
ஒரு பகுதி இன்னும் கூட நடந்த துன்பியல் நிகழ்வுகளிலையிருந்து விடுபட முடியாமல் புத்தி பேதலிச்சுப்போய் ஒளியெப்ப தெரியும் இருள் எப்ப விலகும் எண்டு யோசிச்சுக் கொண்டு நிக்கிது.
புத்தி ஜீவிகள் எண்டு சொல்லிக் கொள்வோர் மூச்சும் இல்லை பேச்சும் இல்லை.
என்ன செய்யலாம் சொல்லுங்கோ …..?
யாராவது தாயகத்திலை கொஞ்சமேனும் அக்கறை உள்ளவை யோசியுங்கோ …
ஏதாவது எழுத வேண்டும் எண்டு வெளிக்கிட்டால் சில இணையத் தளங்கள் சனீஸ்வரன் துரோகி புதினத்திலை எழுதிற வழுதி போன்ற புழுதிதான் இவன் எண்டு வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திச்சினம். வேண்டாம் என்டு விட்டிட்டு இருந்தன்.
இப்பவும் மனம் கேட்கவில்லை….. என்ன செய்யலாம் யாராவது சொல்லுங்கோ …..
உங்கடை பதில் கண்டு தொடர்கிறன்…
யாழப்பாணத்திலையிருந்து சனீஸ்வரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக