இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு இடம் பெயர்ந்து அடைக்கலம் தரும் நாடொன்றை தேடி அகதிகளாக புறப்பட்ட வேளையில் கப்பல் பழுதடைந்து பினாங்கு கடலில் தத்தளித்து கொண்டிருந்தபோது மலேசியா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 75 ஈழ அகதிகளில் 24 பேரைத் தவிர ஏனையோர் ஏற்கனவே விடுதலைசெய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 10 மாதங்களாக விடுதலை செய்யப்படாமல் மலாக்க தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த 24 தமிழீழ அகதிகளும் பல அமைப்புக்களின் அயராத முயற்சியால் இன்று விடுதலைசெய்யப்பட்டனர்.
இன்று விடுவிக்கப்பட்ட 24 அகதிகளுக்கும் ஏற்கனவே மலேசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 5000க்கும் மேற்பட்ட ஈழ அகதிகளுக்கு குடிநுழைவுத்துறை அதிகாரிகளோ காவல்துறையினரோ தொடர்ந்து தொந்தரவு கொடுக்காமல் அவர்களுக்கும் மலேசியாவில் அகதிகளாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்கவேண்டும் என இவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மனித உரிமை அமைப்புகள் கேட்டுக்கொண்டன.அகதிகள் ஒன்றும் சொர்க்கத்தை நோக்கிய கனவுகளில் மிதந்தபடி ஆபத்தான படகுப் பயணங்களில் ஈடுபடுவதில்லை. மாறாக சொந்த மண்ணில் கிடைக்காத நிம்மதியான வாழ்வை தேடியே உலகெங்கும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர்”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக