வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தேசியத்தலைவர் அவர்களின் தாயார் கவலைக்கிடமான நிலையில்.

தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயாரான பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாளின் நிலைமை மோசமடைநதுள்ளதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது சுய நினைவினை இழந்து விட்டார். அவரால் யாரையும் அடையாளம் காண முடியாதுள்ளது. அதே போன்று அவர் பேசும் சக்தியையும் இழந்துள்ளார். எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக