சனி, 5 மார்ச், 2011

போராளிக் குழுக்கள் திரிப்போலியை நெருங்குகின்றன



இன்று அதிகாலை 06.00 மணிக்கு லிபியாவின் முக்கிய நகரான ஸாவியா நகரத்தை நெருங்கிய கடாபியின் படைகள் அங்குள்ள மக்களில் சுமார் 50 பேரை கொன்று 150 பேரை படுகாயமடையச் செய்தன. பின்னர் நடைபெற்ற மோதலில் கடாபியின் படைகள் தோல்வியடைந்து பின்வாங்கின. போராளிக்குழுக்கள் லபிய தலைநகரை நெருங்க இது முக்கிய திறவு கோலாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டை விட்டு ஓடினால் தற்போது கடாபிக்கு புகலிடமளிக்க வெனிசியூலா, சிறீலங்காவைத் தவிர வேறு நாடுகள் இருப்பதாக தெரியவில்லை. இதேவேளை கடாபி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி வழியாக பேசியுள்ளார். கடாபிக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு வழங்கப்படுமென மகிந்த சென்ற வாரம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிறீலங்காவில் இருந்து இப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் சிறீலங்கா கடாபியை கைகழுவிவிடவே வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
லிபியாவில் கூடிய விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறும் அந்நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேர்ணல் மும்மர் கடாபியிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லிபிய ஜனாதிபதி கேர்ணல் மும்மர் கடாபி ஜனாதிபதி மஹிந்தவை நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதன்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக