புதன், 23 மார்ச், 2011

தேசத்தின் பேரன்னையின் அஸ்தி வங்கக் கடலில்

உலகில் உள்ள தமிழர்களின் மனதில் தாயாய் வீற்றிருக்கும் தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் 31 வது நினைவு நாளை ஒட்டி அன்னையாரின்   ஈமச்  சாம்பலை, மலர் தூவி தமிழர் கடலில் கலக்கும் நிகழ்வு  இன்று மாலை 6 மணியளவில் சென்னை கண்ணகி சிலை எதிரில் உள்ள தமிழர் கடற்கரையில் உயிர்ப்புடன் நடந்தேறியது.

ஐயா நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ காசியானந்தன் நடராசன்  தியாகு உட்பட பல்வேறு தலைவர்களும், மன்சூர் அலிகான், கௌதமன் உடபட  திரைத்துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நாம் தமிழர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மாலை 5.30 மணிக்கு தாயாரின் ஈமச் சாம்பலுடன் நெடுமாறன் வைகோ ஆகியோர் கண்ணகி சிலைக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கு கூடியிருந்தோரின் வீரமுழக்கம் கடற்கரை எங்கும் எட்டு திக்கும் எதிரொலித்தது.   அங்கிருந்து ஐயா  நெடுமாறன்  அன்னையின் ஈமச் சாம்பலை ஏந்தி வர சிறிது தூரத்திற்கு பிறகு அவரிடம் இருந்து வை கோ பெற்று கொண்டார் .அரை மணி நேர நடை பயணத்திற்கு பிறகு தமிழன் கடலில் (வங்க கடல்)   வீரமுழக்கம் விண்ணை முட்ட   தாயாரின் ஈமச் சாம்பல் மலர் தூவி கடலில்  கரைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக