வியாழன், 9 ஜூன், 2011

கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா?

யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா? என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர்.

இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள்.

மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள்.

இந்த தொகுப்பை பலர் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவார்கள் என்று கருதியபோதும் இதிலுள்ள உள்ளடக்கம் மானிடத்தின் உயிர் நாடியை உலுப்பும் செயலாக உள்ளதாகவும் இப்படியான சம்பவங்களை வெளிப்படுத்ததாமல் இருப்பது ஆபத்தானது என்றும் கருத்து வெளியிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக