வெள்ளி, 14 அக்டோபர், 2011

சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது:


சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழர் பிச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா, நீதியையும் உண்மையையும் நிலை நாட்டி மனித உரிமையைப் பேணுவதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செனல்-4 வின் இலங்கையின் ‘கொலைக் களம்’ ஆவணக் காணொளி காண்பிக்கப்படுவதற்கு முன்னரே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த செனல்-4 ஆவணக் காணொளியின் தயாரிப்பாளரான கெலம் மெக்யார், தனது குற்றச் செயல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் ஒரு போதும் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்பதனைய சிறிலங்கா அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக