சனி, 21 ஆகஸ்ட், 2010
மட்டக்களப்பில புகையிர நிலைய பாதுகாப்புக்கு சென்ற பொலிஸாரின் ஆயுதம் மோட்டார் சைக்கிளில் வந்தோரால் பறித்துச்செல்லப்பட்டது
மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக காவல் கடமைக்காக வந்துகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஆயதத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 6.30மணியளவில் புகையிரத நிலைய காவல் கடமைக்கு வந்துகொண்டிருந்த பொலிஸாரின் துப்பாக்கியை கோட்டைமுனை கணேசா வித்தியாலயத்துக்கு முன்பாக வைத்து மோட்டார் சைக்கிளில்வந்த இருவர் பறித்துக்கொண்டு சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பொலிஸ் சாஜன் செனவிரட்ன என்பவரின் ரி.56ரக துப்பாக்கியே இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்தோர் புகையிரத குறுக்கு வீதியினூடாக தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற படையினரும் பொலிஸாரும தேடுதலில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக