சனி, 14 ஆகஸ்ட், 2010
ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் ”தமிழர் கூட்டணி” உதயம்!
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காகத் தமிழர் கூட்டணி என்ற புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைப் பிரச்சினைக்காகப் போராடும் பல்வேறு அமைப்புக்களை இணைத்து இந்தக் கூட்டணியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இப்போதே தங்களைத் தயார்ப்படுத்த ஆரம்பித்துள்ளன.
தி.மு.க. கூட்டணியை எப்படியும் வீழ்த்தியே ஆகவேண்டும் என்று அ.தி.மு.க தரப்பு புதிய வியுகங்களை அமைத்து தங்களது அணிக்கு புதிய கட்சிகளைக் கொண்டு வரும் பணிகளை ஆரம்பித்துள்ளது.
தி.மு.கவும் தனது கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந் நிலையில் இலங்கை விவகாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் மீது சிறீப்பாயும் தமிழ் அமைப்புக்கள் அனைத்தினையும் ஒருமுகப்படுத்தி "தமிழர் கூட்டணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி நடக்கிறது.
இந்தக் கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தருமாம். ஒருவேளை தி.மு.கவை காங்கிரஸ் வெட்டிவிட்டு அ.தி.மு.க காங்கிரஸ் உறவு ஏற்பட்டால், அதில் வைகோவின் ம.தி.மு.க இருக்க முடியாத நிலைமை உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக