ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன.
முழக்கங்கள்:
சிங்கள் இனவெறி அரசே,
ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து
இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு!
முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று!
அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்!
இந்திய மேலாதிக்க அரசே,
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்காதே!
வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் ஈழத்தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமிக்காதே!
தமிழக மக்களே,
50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்!
இலங்கை இனவெறிப் பாசிச அரசுக்கும் அதனைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக சர்வதேசப் பாட்டாளிவர்க்கத்தையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டுவோம்!
ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
இதே நாளில் இலண்டனில் “புதிய திசைகள்” எனும் ஈழத்தமிழர் அமைப்பு சார்பாக பல பிரிவினரும் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முழக்கங்கள்:
இலங்கை அரசே
இன அழிப்பை நிறுத்து!
தமிழர் பிரதேசங்கள் மீதான
ஆக்கிரமிப்பை நிறுத்து!
தமிழ் மக்களை விடுதலை செய்
தடுப்பு முகாம்களை மூடு!
பிரதேச ஆக்கிரமிப்பை நிறுத்து
தமிழ் மக்களை மீள குடியமர்த்து!
சுயநிர்ணய உரிமை
தமிழர் பிறப்புரிமை.
அரசியல் கைதிகள் மீதான
சித்திரவதையை நிறுத்து!
கடத்தப்பட்ட ஊடகவியலாரர்கள் எங்கே?
இலங்கை சிறுபான்மையினரே!
ஓன்று படுவோம் எமது உரிமைக்காக
போராடுவோம்!
சிங்கள மக்களே!
சிறுபான்மையினர் மீதான
ஒடுக்குமுறைக்கெதிராக
குரல் கொடுங்கள்!
உலகில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினரின்
போராட்டங்களின் ஓர் அங்கமாக எமது உரிமைப்போர்
மாறட்டும்.
சிங்கள மக்களே!
தமிழ் பேசும் மக்களின் விடுதலை
என்பதே உங்களுக்கான ஜனநாயகம்.
இந்திய அரசே!
இன அழிப்பு பயிற்சி களம் இலங்கை தமிழர்,
செயற்பாட்டு களம் இந்திய பழங்குடிகளா?
கடந்தகால தவறுகளில் இருந்து
கற்றுக்கொண்டு முன்னேறுவோம்.
இந்திய அரசே!
பிராந்திய வல்லாதிக்கதிற்காக
இலங்கை தமிழர் உரிமையை
விலை பேசாதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக