பிரான்ஸ் எல்லையில் இருந்து சுமார் 1.30 மணியளவில் சிவந்தனும், சுவிஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக நடை பயணத்தை மேற்கொண்ட 3 இளைஞர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களோடு அங்கு குழுமி இருந்த தமிழ் மக்களோடு சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தை நடந்து மதியம் 2.30 மணியளவில் ஐ.நா முன்றலுக்கு பேரணி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் முருகதாசின் தாய் தந்தையரால், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, முருகதாஸ் தன்னை மாய்த்துக்கொண்ட இடத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற அந்நிகழ்வில் ஐ.நா அதிகாரிகளிடம் சிவந்தன் உட்பட மேலும் நால்வர் சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.
கையளித்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐ.நா. அதிகாரிகள் என்ன கூறினார்கள் என்ற தகவல்கள் இதுவரையில் ஊடகங்களுக்கு சிவந்தன் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக