செவ்வாய், 14 செப்டம்பர், 2010

மட்டக்களப்பைச் சேர்ந்த 13 வயதுச்சிறுமி சிகிரியாவில் அநாதரவான நிலையில் மீட்பு

மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அநாதரவான நிலையில் சிகிரியா பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இச் சிறுமி தனிமையில் நீண்ட நேரமாக நின்று அழுது கொண்டிருப்பதைக்கண்டவர்கள், அது குறித்து சிகிரியா பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சுந்தரமூர்த்தி சேனியா என்ற இந்தச் சிறுமி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், 2004 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடல் கோள் அனர்த்தத்தில் தனது பெற்றோரையும், யுத்த நடவடிக்கையில் தனது இரு சகோதரர்களையும் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது உறவினர்கள் தன்னை பராமரித்து வருவதாகவும் அவர்களுடன் உல்லாசப்பயணம் மேற்கொண்டு வந்தபோது தான் இவ்வாறு தனிமையில் நிற்பதாகவும் கூறினார்.

பொலிஸார் சிறுமியின் உறவினர்களைப்பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக