செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சமீபமாக குன்றிலிருந்து பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை


திருகோணமலை பிரட்ரிக் கோட்டையினுள் கோணேஸ்வராலயம் செல்லும் பாதையிலுள்ள குன்றிலிருந்து கடலினுள் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பறங்கியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை இலங்கைக் கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் அளவில் கோயில் அமைந்துள்ள மலையைச் சுற்றியிருக்கும் கடலில் காணப்படும் இரண்டு பாறைகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில் மீட்டனர்.

இறந்தவர் 38 வயதான ரஸல் பெறஞ்ஞர் என்ற இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையென்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் மோட்டார் சைக்கிள் கோயிலுக்குச் செல்லும் பாதையிலுள்ள அன்னதான மண்டபம் அருகில் கைவிடப்பட்ட நிலையில் கைப்பற்றினர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் உறவினர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமையிலிருந்து இவரைத் தேடியதாகவும் பொலிஸாருக்குச் செய்த முறைப்பாட்டையடுத்துஇ கடற்படையினர் திங்கட்கிழமை தேடுதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக