வியாழன், 23 செப்டம்பர், 2010

26 வது நாளில் தொடரும் நடைப்பயணத்தில் நாளாந்தம் இணையும் தமிழ் உறவுகள்

பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்றலில் 28.08.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் புறுசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய இன்னும் 60 கி.மீ தூரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று (23.09.2010) 26வது நாளில் அனைத்துலக தமிழ் மக்களின் பேராதரவோடு பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக தொடரப்பட்டு வருகிறது.

மனிதநேய கோரிக்கைகளை முன்வைத்து திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியாஇ திருமதி தேவகி குமார் (36) சுவிஸ்இ திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்களும் மேற்கொண்டுவரும் நடைப்பயணத்தில் நேற்றும் பெல்ஜிய காவல்துறையினர் வந்து வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

மூவரும் மிகுந்த உடல்நிலைப் பாதிப்புடன் உறுதி தளராது தமது நடைப்பயணத்தை தொடர்கின்றனர். நேற்று திருமதி தேவகி குமார் அவர்கள் திடீரென மயக்கமுற்று பின்னர் மருத்துவ முதலுதவியின் பின் தொடர்ந்து நடந்தார்.
இவர்களுக்கு உறுதுணையாக பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள் வேலைத்தலங்களில் திடீர் விடுமுறை பெற்று
வந்து இணைந்தவண்ணம் உள்ளனர்.

எமது மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும்இ உரிமைக்குமான இவ்வாறான போராட்டங்கள் பெல்ஜியத்தோடு நின்றுவிடாது உலகில் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 23ஆம் ஆண்டு நினைவுதினமான இம்மாதம் 26ஆம் நாள் புறுசெல்ஸ் நகரை சென்றடையும் இவர்கள் மறுநாள் 27.09.2010 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய வளாகத்தில் நடைபெறவுள்ள 'எழுவாய் தமிழா நெருப்பாய்' எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொள்வதுடன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மனிதநேயக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர்.

இந்த மாபெரும் எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமைக்காக குரல்கொடுக்க அனைத்துலக தமிழ் உறவுகளையும் உணர்வோடு அணிதிரள அழைக்கின்றோம்.

அனைத்து நாட்டு நகரங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. உங்கள் பகுதி தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்வதோடு உங்கள் அறிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மேலதிக விபரங்களுக்கு: 0041795949517

போக்குவரத்து விபரங்களுக்கான தொடர்புகளுக்கு:

சுவிஸ் ஈழத்தமிழர் அவை: 0799518522
தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்: 0658589290
சம உரிமைக்கான தமிழ்ர் மையம் ஜேர்மனி: 01732762766
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: 03272921804
நோர்வே ஈழ்த்தமிழர் அவை: 045477983
பிரித்தானியா: 07403154084
டென்மார்க் தமிழர் பேரவை: 52173671
தமிழர் பண்பாட்டுக்கழகம் பெல்ஜியம் 0493885930

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக