வெள்ளி, 17 செப்டம்பர், 2010
உரைகல் பத்திரிகை அலுவலகத்திற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரால் தடை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து வெளிவரும் உரைகல் பத்திரிகை அலுவலகத்திற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரால் தடையேற்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
நேற்றிரவு இந்த பத்திரிகை அலுவலகத்திற்குள் பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள் பத்திரிகை அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தமது பத்திரிகை மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக பத்திரிகையின் ஆசிரியர் எம்.ஐ.ரஹ்மதுல்லா தெரிவித்துள்ளார்.
அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்தும் குண்டர்களை வைத்து தமது அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் உரைகல் பத்திரிகை தாக்குதலுக்கு உள்ளானதுடன் அதன் ஆசிரியரும் தாக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக