ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மசாஜ் என்ற போர்வையில் பல விபச்சார நிலையங்களும் தோன்றும் யாழ்.நகரப் பகுதி.

மசாஜ் நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு வடிவங்களில் தென்னிலங்கை மசாஜ் நிலையங்களின் ஒத்துழைப்புடன் நிறுவ சிலர் முயன்று வருகின்றனர்.


எல்லா உறுப்புக்களின் சிறந்த தொழில்பாட்டுக்கும் குருதிச் சுற்றோட்டத்தை அதிகரிப்பதற்கும் மலச் சிக்கலை நீக்கி மன உடல் சிக்கல்களுக்கு நிவாரணம் தருவதாகப் போலி வாக்குறுதிகளைக் கூறிக் கொண்டு மேற்படி மசாஜ் நிலையங்களை யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் ஏற்கெனவே மதுபான சாலைகள் அதிகரித்துள்ளன.



அத்துடன் உல்லாசப் பயணிகள் வருகையுடன் போதவஸ்துப் பாவனையும் யாழ்ப்பாணத்தில் தலைகாட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் மேற்படி மசாஜ் நிலையங்களும் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படுமாயின் அவை வியாபார நோக்கத்தில் யாழ்.நகரப் பகுதியில் மட்டுமன்றி குடாநாடு பூராகவும் வேகமாக நிறுவப்பட்டு எமது கலாசாரப் பண்பாடுகளை முற்றுமுழுதாக மாற்றி விடும் என்றும் மசாஜ் என்ற போர்வையில் பல விபச்சார நிலையங்களும் தோன்றும் என்றும் சமூகவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக